Tuesday, November 10, 2009

DR. A. P. J. Abdul Kalam 's Speech in Hyderabad

Please read this article by giving 10 minutes from your busy life. Really good.... ** *

* The President of India DR. A. P. J. Abdul Kalam 's Speech in Hyderabad . *

Why is the media here so negative?

Why are we in India so embarrassed to recognize our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse acknowledge them--- Why?

We are the first in milk production.

We are number one in Remote sensing satellites.

We are the second largest producer of wheat.

We are the second largest producer of rice.

Look at Dr. Sudarshan , he has transferred the tribal village into a self-sustaining, self-driving unit.

There are millions of such achievements but our media is only obsessed in the bad news and failures and disasters.

I was in Tel Aviv once and I was reading the Israeli newspaper. It was the day after a lot of attacks and bombardments and deaths had taken place. The Hamas had struck. But the front page of the newspaper had the picture of a Jewish gentleman who in five years had transformed his desert into an orchid and a granary. It was this inspiring picture that everyone woke up to. The gory details of killings, bombardments, deaths, were inside in the newspaper, buried among other news.

In India we only read about death, sickness, terrorism, crime.

Why are we so NEGATIVE?

Another question: Why are we, as a nation so obsessed with foreign things? We want foreign T. Vs, we want foreign shirts. We want foreign technology.

Why this obsession with everything imported. Do we not realize that self-respect comes with self-reliance? I was in Hyderabad giving this lecture,when a 14 year old girl asked me for my autograph. I asked her what her goal in life is. She replied: I want to live in a developed India . For her, you and I will have to build this developed India . You must proclaim. India is not an under-developed nation; it is a highly developed nation.

Do you have 10 minutes? Allow me to come back with a vengeance.

Got 10 minutes for your country? If yes, then read; otherwise, choice is yours.

YOU say that our government is inefficient.

YOU say that our laws are too old.

YOU say that the municipality does not pick up the garbage.

YOU say that the phones don't work, the railways are a joke,

The airline is the worst in the world, mails never reach their destination.

YOU say that our country has been fed to the dogs and is the absolute pits.

YOU say, say and say.. What do YOU do about it?

Take a person on his way to Singapore . Give him a name - YOURS. Give him aface - YOURS. YOU walk out of the airport and you are at your International best. In Singapore you don't throw cigarette butts on the roads or eat in the stores. YOU are as proud of their Underground links as they are. You pay $5 (approx. Rs. 60) to drive through Orchard Road (equivalent of Mahim Causeway or Pedder Road ) between 5 PM and 8 PM. YOU come back to the parking lot to punch your parking ticket if you have over stayed in a restaurant or a shopping mall irrespective of your status identity... In Singapore you don't say anything, DO YOU?

YOU wouldn't dare to eat in public during Ramadan, in Dubai .

YOU would not dare to go out without your head covered in Jeddah .

YOU would not dare to buy an employee of the telephone exchange in London at 10 pounds ( Rs.650) a month to, 'see to it that my STD and ISD calls are billed to someone else.'

YOU would not dare to speed beyond 55 mph (88 km/h) in Washington and then tell the traffic cop,'Jaanta hai main kaun hoon (Do you know who I am?). I am so and so's son. Take your two bucks and get lost.'

YOU wouldn't chuck an empty coconut shell anywhere other than the garbage pail on the beaches in Australia and New

Zealand

Why don't YOU spit Paan on the streets of Tokyo ? Why don't YOU use examination jockeys or buy fake certificates in Boston ??? We are still talking of the same YOU..

YOU who can respect and conform to a foreign system in other countries but cannot in your own. You who will throw papers and cigarettes on the road the moment you touch Indian ground. If you can be an involved and appreciative citizen in an alien country, why cannot you be the same here in India ?

Once in an interview, the famous Ex-municipal commissioner of Bombay , Mr. Tinaikar , had a point to make. 'Rich people's dogs are walked on the streets to leave their affluent droppings all over the place,' he said. 'And then the same people turn around to criticize and blame the authorities for inefficiency and dirty pavements. What do they expect the

officers to do? Go down with a broom every time their dog feels the pressure in his bowels? In America every dog owner has to clean up after his pet has done the job. Same in Japan . Will the Indian citizen do that here?' He's right. We go to the polls to choose a government and after that forfeit all responsibility.

We sit back wanting to be pampered and expect the government to do everything for us whilst our contribution is totally negative. We expect the government to clean up but we are not going to stop chucking garbage all over the place nor are we going to stop to pick up a stray piece of paper and throw it in the bin.

We expect the railways to provide clean bathrooms but we are not going to learn the proper use of bathrooms.

We want Indian Airlines and Air India to provide the best of food and toiletries but we are not going to stop pilfering at the least opportunity.

This applies even to the staff who is known not to pass on the service to the public. When it comes to burning social issues like those related to women, dowry, girl child! and others, we make loud drawing room protestations and continue to do the reverse at home. Our excuse?

'It's the whole system which has to change, how will it matter if I alone forego my sons' rights to a dowry.' So who's going to change the system? What does a system consist of ? Very conveniently for us it consists of our neighbor's, other households, other cities, other communities and the government. But definitely not me and YOU.

When it comes to us actually making a positive contribution to the system we lock ourselves along with our families into a safe cocoon and look into the distance at countries far away and wait for a Mr.Clean to come along & work miracles for us with a majestic sweep of his hand or we leave the country and run away. Like lazy cowards hounded by our fears we run to America to bask in their glory and praise their system. When New York becomes insecure we run to England . When England experiences unemployment, we take the next flight out

to the Gulf. When the Gulf is war struck, we demand to be rescued and brought home by the Indian government. Everybody is out to abuse and rape the country. Nobody thinks of feeding the system. Our conscience is mortgaged to money.

Dear Indians, The article is highly thought inductive, calls for a greatdeal of introspection and pricks one's conscience too.... I am echoing J. F. Kennedy 's words to his fellow Americans to relate to Indians.....

'ASK WHAT WE CAN DO FOR INDIA

AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA

WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'

Lets do what India needs from us.

Forward this mail to each Indian for a change instead of sending Jokes or junk mails.

Thank you,

Dr. Abdul Kalaam

I humbly request you to forward this to every Indian...... .JAI HIND ......... ........

Monday, November 12, 2007

வேலு நாச்சியார்


எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.
வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும்.மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும்.
இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746_ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.
சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல்.
ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான்.
சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.
நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.
ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.
திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது கதறிஅழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.
வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.
பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.
வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.
தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.
வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர்.
வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது.
அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.
சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.
வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

Friday, September 21, 2007

THIRU S.D.SOMASUNDARAM


THIRU S.D.SOMASUNDARAM , popularly known as S.D.S, A veteran political leader and able administrator, served as a Cabinet Minister in the State Government. Hailing from an agriculturist thanjavur kallar family, Thiru Somasundaram was an active social worker and was associated with various social organizations.Thiru S.D.S did his engineering (B.E mechanical ) from annamalai university. He was a great athelete , a football player during his college days and marathon race winner representing tamil nadu . After his graduation, s.d.s worked as an assistant engineer in public works department.


Thiru s.d.s began his political career as an activist of the dravida kazhagam in 1947 and joined the dmk when the late c n annadurai floated the party in 1949. He was first elected to parliament from the thanjavur lok sabha constitutency in tamil nadu in 1967 after defeating former president R.V. Venkataraman. He was re-elected from the same constituency in 1971 and 1977.


He was one of the first to come out of the DMK along with MGR and was considered by the AIADMK middle and lower-level workers as a simple man who mixed with them easily and had a fairly clean record. MGR took the activities of SDS very much close to heart. He resigned his MP post in 1977 and was nominated to the now-defunct legislative council.


THIRU S.D.S was an able parliamentarian and served as a Member of the Joint Committee on Salaries and Allowances of Members of Parliament during 1971-72, Committee on Private Members’ Bills and Resolutions during 1973-74; House Committee in 1977 and General Purposes Committee during 1977-78.. He was the first person to question dr mgr about the widespread corruptions during his term as chief minister. As a result of differences , that existed between him and mgr, he decided to quit AIADMK and floated his own party “ namathoo thamizhgam".


Later he quickly folded his new party and returned to the AIADMK, to be in dr .j. Jayalalitha's camp and served as revenue minister from 1991-1996.he was pioneer in conducting 8th tamil world conference at thanjavur during his tenure as revenue minister. Due to differences of opinion with dr.j.jayalalitha, he quitted aiadmk and floated another party called “ puratchi thalaivar aiadmk”.


Thiru S.D. Somasundaram passed away on 6th December, 2001 at Chennai, at the age of 71.

BHASKARA SETHUPATHY

Bhaskara Sethupathy was born on 3rd November 1868, as the first son of the King Muthu Ramalinga Sethupathy II and Muthathal Naachiyar. He was educated in Madras through both Indian and English systems of education.
On the 3rd of April, 1889, he took over as the Head of the Ramanathapuram State. Bhaskara Sethupathy implemented welfare schemes for the common people and also patronized fine arts. He facilitated the entry of Harijans in to the temples and stopped the custom of animal sacrifice in the Rajarajeshwari Temple with the help of jagat guru Sringeri Sankaracharya Swamigal.
Among the rulers of Ramnad, Bhaskara Sethupathy was famed for his munificence and religious activities. It was he who encouraged Swami Vivekananda to visit Chicago to participate in the Parliament of World Religions.
Bhaskara Sethupathy breathed his last on the 27th of December, 1903. Though he lived in this World only for 35 years, he made a lasting impact in the socio cultural canvas during his short life span .

Thursday, September 20, 2007

பாண்டித்துரைத் தேவர்


தமிழின் நலமே தமிழர் நலம் என்ற வேட்கையுடன் தமிழ்ப்பணியாற்றிய அறிஞர்கள் பலர். இவர்கள் பல நிலைப்பட்டவர்கள். காலந்தோறும் தமிழுக்கு நேரிட்ட கேடுகளைக் களந்தெறிய அரும்பாடுபட்டுள்ளனர். தமது சக்திக்கும் தமது அறிவுக்கும் ஏற்ப இவர்கள் மேற்கொண்ட பணிகளால்தான் இன்றும் தமிழ் வளம் பெற்று உயிர் பெற்று, வளர்க்கிறது. வாழ்கிறது.
தமிழுக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை உண்டு. இந்த மரபில் நான்காம் தமிழ்சங்கத்தை நிறுவி தமிழ் காத்த பெருமை பாண்டித்துரைத் தேவருக்கு உண்டு. இன்று நாம் முன் வைக்கும் தனித்த தமிழின் சிறப்பை அன்றே உணர்ந்து அதற்கு விதையிட்டவர் பாண்டித்துரைத் தேவர்.
பாண்டித்துரைத் தேவர் இராமநாதபுரத்தை ஆண்ட சேது மன்னர் பரம்பரையில் தோன்றியவர். சடைக்க தேவர் என்ற உடையான் சேதுபதி (1605-1621), கூத்தன் சேதிபதி (1622 - 1635) முதலான சேது வழியினர் குறிப்பிடத் தக்க மன்னர்களாக விளங்கி உள்ளனர். இவர் தம் வழியில் 1862 முதல் 1873 வரை ஆட்சி செலுத்தியவர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார். இவருடைய தமையனார் பொன்னு சாமித்தேவர் இவ்வரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். பொன்னுசாமித் தேவருக்கும் முத்துவீராயி நாச்சியாருக்கும் 21.03.1867 −ல் பாண்டித்துரைத்தேவர் பிறந்தார்.
பாண்டித்துரை இவ்வுலகில் சுமார் 44 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார். இக்குறுகிய காலத்தில் இவர் ஆற்றிய செயற்பாடுகள் தமிழர் வரலாற்றில் என்றும் நினைக்கத் தக்கவை. இக்காலத்தில் உருப்பெற்று எழுச்சி அடைந்து வளர்ந்து வந்த தமிழ்ப் பணிகளுடன் இரண்டறக் கலந்தவை. இக்காலத்து தமிழ்ப்பணியில் மூழ்கி வந்த பலரும் பாண்டித்துரைத் தேவருடன் நெருங்கிப் பழகி அவர் தம் உதவிகள் பெற்று, ஆலோசனை பெற்று பணிகளில் பல திறப்பட்டவையாய் விரிந்துள்ளமையை இக்காலம் தெளிவாகவே சுட்டுகிறது.
பாண்டித்துரைத் தேவர் தேசியப் பற்றுடையவராக, தலைசிறந்த நிருவாகியாக, கொடை வள்ளலாக இலக்கியப்படைப்பாளியாக, இசை நுகர் மேதையாக, சொற்பொழிவாளராக, தமிழறிஞர்களை மதிக்கும் பண்புடையவராக மற்றும் ஆங்கிலம் முதலான மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கி வந்தார். எவ்வாறாயினும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலவிய இந்தியத் தேசிய அரசியல் பின்புலத்திலும் பாண்டித்துரையாளரை வைத்து மதிப்பிடுவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். அப்பொழுது தான் இவருக்கான முக்கியத்துவம் தெளிவாக உணரப்பட முடியும். இருப்பினும் இங்கு நாம் இவரை புரிந்து கொள்வதற்கான சிறு முயற்சிகளில் மட்டுமே ஈடுபட முடியும்.
தமிழ்மொழி மீது தீவிர பற்றுக் கொண்டவர். இதற்காக தனது வளங்களை சொத்துக்களை தமிழ்ப்பணிக்குச் செல்வு செய்யத் தயங்கவில்லை. உ.வே.சா. , வ.உ.சி. உள்ளிட்ட அக்கால தமிழ்ப் புலமையாளர்களது வாழ்வுடன் பாண்டித்துரையாரது வாழ்வும் ஒன்று கலந்ததாகவே உள்ளது. குறிப்பாக தமிழ் நூற்பதிப்புக்கு உதவி செய்தல் குறிப்பிடத் தக்கது. உ.வோ.சா. பதிப்பித்த 'புறப்பொருள் வெண்பா மாலை', 'மணிமேகலை' ஆகிய இரண்டும் பாண்டித்துரையாரின் உதவியோடு வெளி வந்தன.
மேலும் மதுரைவாசி இராமசாமிப்பிள்ளை என்ற ஞானசம்பந்தப் பிள்ளையைக் கொண்டு தேவாரத் தலைமுறைப் பதிப்பை முதன்முதலாக வெளியிடக்கோரி அதற்கு வேண்டிய உதவியை நல்கியவர் பாண்டித்துரையார். தொடர்ந்து சிவஞான சுவாமிகள் பிரபஞ்ச திரட்டு என்னும் பெயரில் இராமசாமிப்பிள்ளை வெளியிட்ட நூலும் பாண்டித்துரை தேவரின் பொருளுதவி பெற்று வெளிவந்ததாகும். சபாபதி நாவலர் என் புலவரைக் கொண்டு அவ்சிவஞான முனிவரால் இயற்றப்பட்ட சிவசமயவாதவுரை மறுப்பு முதலிய தத்துவ நூல்களும் கன்னாகம் குமாரசுவாமிப் பிள்ளையவர்கள் பதிப்பித்த நூல்கள் சிலவும் பாண்டித்துரையாரின் உதவியால் வெளிவந்துள்ளன.
தொடர்ந்து அபிதான சிந்தாமணி என்ற 1639 பக்கங்கள கொண்ட சிறந்த தமிழ்ப் பேராகராதியைப் பதிப்பிக்க பாண்டித்துரையார் பொருளுதவி செய்துள்ளார்.இவ்வகராதியைப் பதிப்பித்த பதிப்பாசிரியர் ஆ. சிங்காரவேலு முதலியார் இந்நூலின் முன்னுரையில், 'இந்நூல் இவ்வாறு ஒருவாற முற்றுப் பெற்று பின் இதனைச் சென்னையிலிருந்த பிரபுக்கள் சிலரிடம் காட்டினேன். அவர்கள் இத்தகைய நூல் தமிழிற்கின்றியமையாததே. அதனை வெளியிடுக என்றனரேயன்றி யதனை அச்சிட்டு வெளிப்படுத்த ஒன்றும் கூறிற்றிலர்'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நூல் வெளிவருவதற்கான அறிகுறிகள் எதனையும் காணாது சோர்வுற்று துயருற்றுக் கிடந்தார். இந்நிலையில்தான் பாண்டித்துரை தேவர் உதவி கிடைக்கப் பெற்று அபிதமான சிந்தாமணி வெளிவந்தது.
அதே முன்னுரையில் சிங்காரவேலு முதலியார் மேலும் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'மதுரைத் தமிழ்ச் சங்கத்து பிரசிடெண்டும் பாலவனந்தம் ஜமீன்தார் அவர்களும் தமிழ் வளர்த்த ஸ்ரீமான் பொன்னுசாமித் தேவரவர்களின் திருகுமாரரும், என் தளர்ச்சிகளுக்கு ஊன்று கோல் போல் வருமாகிய ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைச் சாமித் தேவரவர்கள் தாமே சென்னைக்கு வந்து நான் எழுதிய நூலைக் கண்டு கணித்து அதனை மதுரைத் தமிழ்ச் சங்க அச்சியந்தி சாலையில் அச்சிடுவான் எண்ணி என்னிடமிருந்த பிரதிகளைத் தாமே மதுரைக்கு எடுத்துச் சென்று அவ்விடத்தில் நாம் எழுதிய அனைத்தையும் பலரைக் கொண்டு சுத்தமாய் எழுதுவித்து மீண்டுமவற்றைச் சென்னையிலுள்ள அச்சுயந்திர சாலையில் என் முன்னிலையில் அச்சிட உத்தரவு கொடுத்து அப்போதைக்குப்போது பொருளுதவி செய்து வந்தனர். அவர்கள் அருஞ்செயலை இப்புத்தகத்தை நோக்கும் அறிவாளிகள் புகழாமற் போவார்'' என்று அபிதான சிந்தாமணியில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பாண்டித்துரைத் தேவரத தமிழ்பற்றும் கொடைத் தன்மையும் நன்கு புலப்படுகிறது.
தமிழ் பற்றாளரான பாண்டித்துரைத் தேவர் தமிழ்ச் சொற்கள், பாடல்கள் பொருள் ஆகியனவற்றைச் சரியான முறையில் மக்கள் கையாள வேண்டும் என்ற கருத்துடையவர். பிழை மலிந்த நூற்பதிப்புகளைக் கண்டால் அவற்றைத் தொடவும் கூசுவார் என்ற செய்தி உண்டு. இதனை உறுதிப்படுத்தும் −வர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி கவனிப்புக்குரியது. மதுரையில் ஸ்காட்துரை என்ற ஆங்கிலோ இந்தியர் ஒருவர் வக்கீலாக இருந்தார். இவர் தமிழ்மொழியில் அரைகுறையான பயிற்சியுடைவர். நேர்வாயிலன்றி வக்கிர கதியிற் செய்வது இவரியல்பு. வள்ளுவரது திருக்குறட் பாடல்களில் எதுமை மோனை இல்லாத இடங்களையெல்லாம் திருத்திப் புதியதான குறட் புத்தகமொன்றை இவர் நல்லதாளில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். ''சுகாத்தியரால் திருத்தியும் புதுக்க்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்'' என்றவாறு அப்புத்தகத்தின் தலைப்பு அமைந்திருந்தது. மதுரையில் தேவரவர்களை அவர் ஒருகால் சந்தித்த போது, தாம் செய்த அவ்வரிய வேலையைத் தெரிவித்து அதன் பிரதியன்றையும் தேவர்க்கு அளித்தனர். அதைப் பெற்ற தேவர் அதன் முதல் பக்கத்தைத் திறந்ததும்


'அகர முதல வெழுத்தெல்லாம்

ஆதிஉகர முதற்றே உலகு


என்று அமைந்திருந்தது. இவ்வாறே பல குறட்பாக்களும் நெடுக திருத்தப்பட்டிருந்தன. இவற்றைக் கண்டதும் தேவரவர்கட்குக் கோபம் ஒரு பக்கம் பொங்கி எழுந்தது. ஆயினும் அதை அடங்கிய வண்ணமே ''தாங்கள் இதனில் எத்தனை பிரதிகள் அச்சிட்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டேன்.இருநூறு பிரதிகள் வரை வேண்டியவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. மற்றவை விலையாகவில்லை, நெடுநாளாக என்னிடமே உள்ளன என்றார் துரை.
''புத்தகப் பிரதியின் விலை என்ன?'' என்று தேவர் கேட்டார். ''ரூபா ஒன்று'' என்று பதில் வந்தது. தாங்கள் சிரப்பட வேண்டாம். நானே அவற்றை மொத்தமாக வாங்கிக் கொள்கிறேன். அவற்றை ஒருசேர என்னிடம் அனுப்பிவிடுங்கள்'' என்றார் தேவர். துரைக்கு அப்போது செலவு அதிகம் போலும். ரூபாய் முந்நூறு தமக்கு ஒரு சேரக் கிடைப்பதற்கு மகிழ்ந்து உடனே, துரை அவற்றைக் கட்டி இராமநாதபுரத்திற்கு அனுப்பிவிட்டார். தேவரவர்கள் தம்மூர் வந்ததும், ஸ்காட் துரையின் அறியாமையையும் செருக்கையும் பலருக்கு எடுத்துக் கூறி மதுரையிலிருந்து வந்த குறட் புத்தகக் கட்டை கொண்டு வரும்படி செய்தார். அது வந்ததும், அவர் உத்தரவின்படி குழியன்று பக்கத்தில் தோண்டப்பட்டது. அப்புத்தகப் பிரதிகள் முழுமையும் அதனுள் இடச் செய்து தம் கண்முன் தீ வைத்துக் கொளுத்தும்படி உத்தரவிட்டார் தேவர். அவை யாவும் சில நிமிஷங்களில் சாம்பலாகிவிட்டன.
''இப்பித்துக் கொள்ளியிடம் எஞ்சியிருந்த முந்நுறு பிரதிகளும் அறிஞர் பாற்சென்று மனத்துன்பம் விளைக்காதிருப்பதற்கும், அறியாதார் திருக்குறளை தாறுமாறாக பாடமோதாமல் இருப்பதற்கும் இதுதான் தக்க பரிகாரம்'' என்று யாவரும் அறியக்கூடி அகமகிழ்ந்தார் தேவர். ஸ்காட்துரை இச்செய்தியை அறியார். அவரும் சிலகாலத்தில் இறந்துவிட்டார். என்னே தேவரின் தமிழ்ப்பற்று (செந்தமிழ் வளர்த்த தேவர்கள், மு. இராவையங்கார், பதி, டி,ஜி. கோபால் பிள்ளை சூள் 1951, பக் 98-99).
தேவரது தமிழ்ப் பணிகளை பலவாறு பலநிலைகளில் வைத்து நோக்க முடியும், இவற்றில் சிறந்தது மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்து அதன் மூலம் மேற்கொண்ட பணிகளாகும்.
பாண்டித்துரையார் 1900 ஆம் ஆண்டு சென்னை சென்று முகவைக்குத் திரும்பும் வழியிற் திருப்பாதிலிபுலியூருக்கு வந்து தவத்திரு ஞானியார் அடிகளைத் சந்தித்தார். அன்று மாலை பாண்டித்துரையார் தலைமையில் ஞானியார் அடிகள் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழன் தற்கால நிலை என்ற பொருளில் ஞானியார் அடிகளின் கடல்மடை திறந்தது போன்ற உணர்ச்சிமிக்க வரையினைக் கேட்க பாண்டித்துரையார் அகமகிழ்ந்தார். அச்சொற்பொழிவில் பாண்டித்துரையாரும் பிற செல்வந்தர்களும் ஒன்றுகூடி மீண்டும் ஒரு தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவவேண்டுமென்றும், அதைத் தமிழின் தலைமையிடமாக கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன செய்ய வேண்டும் என ஞானியர் அடிகள் கேட்டுக் கொண்டார்.
அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த பாண்டித்துரைத் தேவர் தமது முடிவுரையில், ஞானியாரடிகள் கூறிய கருத்து போற்றுதற்கரியது, ஆற்றற்குரியது என்றும், தாம் தமது சகோதரரான பாஸ்கரசேதுபதியிடமும் கலந்து பேசித் தக்க முடிவு செய்வதாகவும் உறுதி கூறினார். அதன்படி சகோதரரின் உதவியும் பெற்றுத் தமிழ்சங்கம் உருவாகக் காரணமாக இருந்தார். 1901 செப்டம்பர் 14ஆம் நாளன்று தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கும் செய்தி நாடெங்கும் அறிவிக்கப்பட்டது.
பாண்டித்துரைத் தேவரால் உருவாக்கப்பட்ட தமிழ்ச்சங்கத்தின் பணிகளைத் தொகுத்துப் பார்க்கும் பின்வரும் கருத்துக்கள் உருப்பெறக்காணலாம். (முனைவர் சிலம்பு நா. செல்வராசு 2005)
1. பண்டைத் தமிழ் இலக்கியங்களை அழிவிலிருந்து காத்தலும் சேகரித்தலும்
2. முதன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்களை அச்சிட்டுத் தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தல்.
3. புதிய தமிழ் இலக்கியங்களைப் படைப்பித்தல், உரை எழுதுதல்.
4. தமிழுக்கென புதியக் களஞ்சியங்களை உருவாக்குதல், அகராதிகளை உருவாக்குதல்.
5. தமிழ்நாட்டு வரலாற்றை முறையாக உருவாக்கி வெளியாக்குதல்
6. தமிழ் இசை முதலான கலைகளை உயிர்ப்படையச் செய்தல்.
7. தமிழ் கல்விக்கு ஊக்கம், தருதல், பரவலாக்கள்.
8. தமிழ் மருத்துவமுறை முதலான அறிவியற் துறைக்கு ஊக்கம் தருதல்.
மேலே கூறப்பட்ட அனைத்துத் தேவையான பணிகளையும் தமிழ்ச்சங்கம் '1901-1915க்குள் நிறைவு செய்துள்ளது என்பதையும் நா கவனிக்க வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்டவை யாவும் பாண்டித்துரைத் தேவர் வாழ்ந்த தமிழ் ச் சமூகத்திற்கு வேண்டியனவாக இருந்தன. .இவை வெறுமனே மொழிப்பற்றின் காரணமாக மட்டும் நிகழவில்லை. மாறாக இப்பணிகளை ஊடறுத்து நின்ற தமிழ்த் தேசியப் பிரக்ஞை மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் உருவாக்கப் பின்புலமும் காரணமாக இருந்தது. குறிப்பாக மொழிவழித் தேசியம் கருத்து நிலையாகவும், பண்பாட்டு தளமாகவும் மேற் கிளம்பி வளர்ந்து வரும் பின்புலத்திற் தான் நாம் பாண்டித்துரைத் தேவரது பணிகளை புரிந்து கொள்ள வேண்டும்.
பாண்டித்துரைத் தேவர் 1911 டிசம்பர் இரண்டாம் நாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார். ஆனால், அவர் வழிவந்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் மற்றும் தமிழக இந்திய அளவில் உருப்பெற்ற சமூக அரசியல் வினைப்பாடுகளும் ஒருங்கிணைந்தும் பிரிந்தும் தத்தமக்கேயுரிய பாதையில் பயணிக்கும் நிகழ்ச்சிகள் பின்னர் உருவாகி விட்டன. ஆனால், தமிழ், தமிழர் பற்றிய தேடல் ஆய்வு யாவும் உணர்ச்சி நிலைகளுக்கப்பால் அறிவு சார்ந்த மரபுகளுக்கூடாக வளர்ந்து வர வேண்டிய அவசியம இன்று உள்ளது. ஆகவே, பாண்டித்துரைத் தேவர் பற்றிய மதிப்பீடு புரிந்து கொள்ளல் இப்பின்புலத்திலே இருக்க வேண்டும்.


article contributions by

1.madusudhanan

2. dr s.r ranganathan

extracts from

4. kalam thorum thamizh

5. pandithurai thevar valkai varalaru

6. ezhakiyamum eakammum