Sunday, September 09, 2007

மருதமலை மாமணியே முருகய்யா


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?


கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்த மலை?


தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?


தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை.. மருத மலை.. முருகா..மருதமலை மாமணியே.. முருகய்யா.. மருதமலை மாமணியே.. முருகய்யா...தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்..மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்..அய்யா உனது மனம் பெற மகிழ்ந்திடவே..மருதமலை மாமணியே முருகய்யா... தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..மருதமலை மாமணியே முருகய்யா...தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..


ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..மருதமலை மாமணியே முருகய்யா... தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..மருதமலை மாமணியே முருகய்யா...கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்..நாடியென் வினை தீர நான் வருவேன்..நாடியென் வினை தீர நான் வருவேன்..அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக..எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக..எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..மருதமலை மாமணியே முருகய்யா... தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..மருதமலை மாமணியே முருகய்யா...சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்.. நான் மறவேன்..பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன்.. நான் வருவேன்..சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்.. நான் மறவேன்..பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன்.. நான் வருவேன்..பரமனின் திருமகனே... அழகிய தமிழ் மகனே...பரமனின் திருமகனே... அழகிய தமிழ் மகனே...காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனது பலம் உறுதுணை முருகாஅதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனேஅதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனேபனியது மழையது நதியது கடலது..சகலமும் உந்தொரு கருணையில் எழுவது..பனியது மழையது நதியது கடலது..சகலமும் உந்தொரு கருணையில் எழுவதுவருவாய் குகனே.. வேலய்யா....ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...அ..அ..அ.அ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. மருதமலை முருகா..மருதமலை மாமணியே முருகய்யாதேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யாமருதமலை மாமணியே முருகய்யா..



"மருதமலை முருகன் மீது தீராத காதல் கொண்ட திரையுலக ஜாம்பவான் திரு. சாண்டோ M.M.A.சின்னப்பத்தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி வெளியான 'தெய்வம்' படத்தின் இந்தப் பாடல்தான் தமிழ் மக்களிடையே மருதமலை முருகனைப் பற்றிப் பிரபலப்படுத்தியது.குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மிக வைர வரிகளில், மதுரை சோமு அவர்கள் உச்சஸ்தாயியில் பாடி தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தப் பாடல் இது.அதேபோல் 1972-க்கு பின்பான இளைய சமுதாயத்தினரிடையே கடவுள் பக்தி மானாவாரியாகப் பரவியதற்கு இந்தப் பாடலும், திரைப்படமும் ஒரு காரணம் .திரு.சின்னப்பத்தேவரும் இக்கோவிலுக்கு பெரும் பொருட்செலவில் பல அறப் பணிகளைச் செய்திருக்கிறார். மலைப்பாதையில் இரவு நேரத்திலும் பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக அப்போதே மின் விளக்கு வசதிகளை செய்து கொடுத்ததும் அவர்தான். படியேறுபவர்கள் தங்கும் சில மண்டபங்களை மராமத்து செய்து புதுப்பித்துக் கொடுத்தவரும் அவர்தான் . வாழ்க தேவர்.. 'ஒருவர் மறைந்தாலும் அவர் செய்த புண்ணியங்கள் மறையவே மறையாது..' என்பதற்கு தேவர் அவர்கள் ஒரு மிகப் பெரிய உதாரணம்..

No comments: